My V3 Ads is Scam or Legit? Uncovering the Truth in Tamil

My V3 Ads: Scam or Legit? Uncovering the Truth

 My V3 Ads is Scam or Legit? Uncovering the Truth 

My V3 Ads ஒரு ஏமாற்று வேலையா? 

My V3 Ads is Scam or legit
My V3 Ads is Scam or legit

    "தினமும் செய்யும் 9 to 5 வேலையால் ரொம்ப விரக்தியில் இருக்கீங்களா?... நீங்கள் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் குடும்ப செலவுக்கே போதாமல் தவிக்கிறீங்களா?... உங்கள் தினசரி வேலையையும் செய்து, சைடாக வெறும் மொபைல் போனில் விளம்பரங்களை மட்டும் பார்ப்பதன் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கில் Passive Income பெற வேண்டுமா?.... அப்போ கமென்டில் Yes என டைப் செய்தால், அதற்கான விவரங்களை நான் கூறுகிறேன்" என பல Influencer களால் தமிழகத்தில் பரவி, இன்று பூதாகரமாக வெடித்திருக்கும் ஒரு பிரச்சனை தான் My V3 Ads!... உண்மையில் இந்த நிறுவனம் என்ன செய்கிறது? இது ஒரு Scam ஆ? நம்பலாமா? வேண்டாமா?... ஒரு வேளை உண்மையாகவே விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா?... 

    இரு தினங்கள் முன்பாக நமது கோயம்புத்தூரில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. நடுவில் ஒரு சிவப்பு காரில் சக்தி ஆனந்தன் (Sakthi Ananthan) என்னும் ஒருவர்... அவர் பேச பேச சுற்றியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரமிடுகிறார்கள். இதற்கு முன்பாக சக்தி ஆனந்த் என்னும் இந்த நபரை நம்மில் பலரும் சமூக வலைதளத்தில் கூட பார்த்திருக்க மாட்டோம். யார் தான் இவர்? எதற்காக இவ்வளவு கூட்டம்?... இத்தனை கூட்டத்திற்கும் காரணம் My V3 Ads என்னும் ஒற்றை ஆப் தான். 

My V3 Ads is Scam or legit
Sakthi Ananthan

    நம்மில் பலருக்கும் இந்த செயலியை பற்றி தெரிந்திருக்கும். சக்தி ஆனந்தன் என்னும் இவர் 2021 ஜூலை 1ல் நிறுவிய ஒரு நிறுவனம் தான் My V3 Ads Marketing. இந்நிறுவனத்தில் செயலி தான் My V3 Ads. 

    இந்த செயலியில் காட்டப்படும் விளம்பரங்களை பார்த்தால், அவர்கள் நமக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பார்கள். இந்த செயலியில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் வருமானம் அதிகரித்துக் கொண்டே போகும். நாம் புதிதாக ஒரு நபரை சேர்த்து அவரும் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது, அவரது பணத்தில் ஒரு சிறிய பங்கு நமக்கும் வரும். இது தான் My V3 Ads ன் Business. 

My V3 Ads is Scam or legit
My V3 Ads

இதைக் கேட்கும் போது எப்படி இருக்கிறது?... கஷ்டப்பட்டு வேலைக்கு போய் சம்பாதிக்கிறதுக்கு, வெட்டியா போன்ல விளம்பரங்களை பார்த்தே பணம் சம்பாதிக்கலாம்னு தோணுதா? கண்டிப்பா தோணும்... அது எப்படி? ஒரு விளம்பரத்திற்கு இவ்வளவு பணம் யாராவது தருவாங்களா? என கொஞ்சம் யோசித்திருந்தால் கோயம்புத்தூரில் இவ்வளவு கூட்டம் கூடியிருக்காது!  

How My V3 Ads works? 

My V3 Ads எவ்வாறு இயங்குகிறது? 

My V3 Ads is Scam or legit
My V3 Ads

    இனி My V3 Ads செயலி எப்படி இயங்குகிறது? என்று பார்க்கலாம். முதலில் இது ஒரு Android App. iOS ல் இந்த செயலி இயங்காது. இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ள ஒரு செயலி ஏன் ஆப்பிள் ஸ்டோரில் இல்லை? என யோசிக்கும் போதே ஏதோ இடிக்கிறது என யோசிக்க வேண்டும். 

    நிறுவப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களை கடந்துள்ள இந்நிறுவனத்தின் My V3 Ads செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் டவுன்லோடு செய்திருக்கிறார்கள். 4.6 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது. இத்தனை இலட்சம் டவுன்லோடுகளை பெற்ற, இந்தளவுக்கு வளர்ந்த ஒரு செயலிக்கு இன்று வரை iOS Support ஏன் இல்லை? என்பதே ஒரு மிகப்பெரிய கேள்வி தான்!... 

My V3 Ads is Scam or legit
My V3 Ads is Scam or legit

    சரி இந்த செயலியை டவுன்லோடு செய்து விட்டேன். உடனே open செய்து விளம்பரம் பார்க்க ஆரம்பித்து விடலாமா? என்று கேட்டால்... முடியாது!... Login செய்ய வேண்டும்! அந்த login யை கூட உங்களால் தனியாக செய்ய முடியாது! உங்களை சேர்த்துவிடக் கூடிய அந்த நபர் தான் உங்களுக்கான user id, password யை உருவாக்க வேண்டும். அதாவது ஒருவர் சேர்த்து விடாமல் உங்களால் இந்த My V3 Ads யை பயன்படுத்தவே முடியாது. 

    சரி... யாரோ ஒருவர் மூலமாக நான் சேர்ந்து விட்டேன். இனியாவது போய் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க ஆரம்பிக்கலாமா? என்று கேட்டால்... முடியாது. முதலில் உள்ளே போனவுடனே Welcome Message என்ற பெயரில் ஒரு நீண்ட வீடியோ ஓடும். நீங்கள் இந்த செயலியில் இணைந்ததற்கான பாராட்டுகளை அந்த வீடியோவில் பல உருட்டுகளோடு சேர்த்து கூறுவார்கள். 

My V3 Ads is Scam or legit
My V3 Ads is Scam or legit

    இப்படி தினமும் ஒரு வீடியோ வரும். அந்த வீடியோவை நீங்கள் முழுமையாக பார்த்தால் மட்டும் தான் விளம்பரங்களைப் பார்க்க முடியும். இந்த வீடியோவுக்கு நடுவே பல இடங்களில் "இந்த வீடியோவை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று குறுஞ்செய்தி தோன்றும். "ஆம்" என் கொடுத்தால் மட்டும் தான் வீடியோ தொடர்ந்து பிளே ஆகும். இப்படி இந்த வீடியோவை முழுமையாக பார்த்து முடித்தால் விளம்பரங்கள் வரும். இப்படி சில விளம்பரங்களை பார்த்து, விளம்பரங்களின் முடிவில் வரும் Captcha வை சரியாக கொடுத்தால் உங்களின் அன்றைய வருமானமான 5 ரூபாய் வந்து விடும். 5 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட வராது. 

    5 ரூபாய வெச்சி நான் என்ன பண்ணுறது? என்று கேட்டால்... இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றால் முதலில் அதிகமாக பணம் கட்ட வேண்டும். அப்போ தான் நீங்க இலட்சாதிபதி ஆக முடியும்! 

Membership Plans in My V3 Ads

My V3 Ads ன் Membership திட்டங்கள்

My V3 Ads is Scam or legit
My V3 Ads Membership Plans

    My V3 Ads ல் பல நிலைகள் உள்ளன. முதலில் OM அதாவது Opening Member. இலவசமாக சேர்ந்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு 5 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடியும். 100 ரூபாய் வந்தவுடன் உங்கள் முதல் வருமானத்தை Pancard மற்றும் Passbook விவரங்களைக் கொடுத்து  Withdraw செய்து கொள்ளலாம். 

    தொடர்ந்து உங்களால் விளம்பரங்களை பார்த்து தினமும் 5 ரூபாய் சம்பாதிக்க முடியும். ஆனால் Withdraw செய்ய முடியாது. இரண்டாவது முறை Withdraw செய்ய வேண்டும் என்றால் BM அதாவது Basic Member ஆக 360 ரூபாய் கொடுத்து upgrade செய்ய வேண்டும். 'நான் பணம் சம்பாதிக்க எதற்காக நான் பணம் கட்ட வேண்டும்?' என்று கேட்டால், அந்த "360 ரூபாய்க்கு நீங்கள் Ayurvedic Face Care Pack யை தான் வாங்குகிறீர்கள். மற்றபடி BM Membership கு நீங்கள் பணம் கட்டவில்லை" என்று ஒரு முரட்டு முட்டு கொடுப்பார்கள். 

    Basic Membership கு அடுத்த நிலையில் 3060 ரூபாய் கட்டி சேரும் Silver Membership உள்ளது. இந்த 3060 ரூபாய்க்கு ஒரு டப்பா Ayurvedic Capsules யை கொடுப்பார்கள். அடுத்த நிலையில் 30360 ரூபாய் கட்டி சேரும் Golden Membership உள்ளது. இந்த 30360 ரூபாய்க்கு 10 டப்பா ஆயுர்வேத மாத்திரைகளை கொடுப்பார்கள். அடுத்த நிலையில் 60660 ரூபாய் கொடுத்து சேரும் Diamond Membership உள்ளது. இந்த 60660 ரூபாய்க்கு 20 டப்பா ஆயுர்வேத மாத்திரைகளைக் கொடுப்பார்களாம்! அடுத்த நிலையில் 1,12,260 ரூபாய் கொடுத்து சேரும் Crown Membership உள்ளது. இந்த 1,12,260 ரூபாய்க்கு 40 டப்பா ஆயுர்வேத மாத்திரைகளைக் கொடுப்பார்களாம்!... 

My V3 Ads is Scam or legit
My V3 Ads Referral Plans

    நீங்கள் அதிகமாக பணம் கட்டி Membership Upgrade செய்ய செய்ய நீங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும். இது தான் My V3 Ads செய்யும் Business! ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றும் நீங்கள் வேறு ஒருவரை இந்த செயலியில் சேர்த்து விடுவதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு சம்பாதிக்கலாம்? என்றும் மேலே உள்ள Chart யை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இது மட்டுமில்லாமல் சுற்றுலா செல்லும் தனித்திட்டங்களும் உள்ளனவாம்! 

My V3 Ads is Scam or legit
My V3 Ads Tour Packages

    நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு ஈடாக எதற்காக இந்த ஆயுர்வேத பொருட்களை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா?... இப்பொழுது 'Membership Upgrade செய்வதற்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்' என்று சொல்லி உங்களிடம் பணம் வாங்கிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாளைக்கே அவர்கள் கம்பெனியை மூடிவிட்டு கம்பி நீட்டி விட்டால், அது ஒரு பண மோசடியாக கருதப்படும். ஆனால் இப்போது நீங்கள் My V3 Ads நிறுவனத்திடமிருந்து ஆயுர்வேத பொருட்களை வாங்கி அதற்கு தான் பணம் கொடுத்திருக்கிறீர்கள். நாளைக்கே அவர்கள் கம்பெனியை மூடிவிட்டு ஓடினாலும் கூட அவர்கள் safe தான். 

My V3 Ads is Scam or legit
My V3 Ayurvedic Capsules

    இந்த 'ஆயுர்வேத மாத்திரைகளை சாப்பிட்டு கால்வலி குறைந்தது... உடல் வலி குறைந்தது...' போன்ற பல உருட்டு வீடியோக்கள் நமது போலி இன்ஸ்டாகிராம் Influencers களால் வெளியிடப்பட்டிருக்கிறது. அது எப்படி ஒரு மருத்துவரின் பரிந்துரையின்றி 1,21,260 ரூபாய் கொடுத்து 40 டப்பா ஆயுர்வேத மாத்திரைகளை வாங்கி தைரியமாக சாப்பிட கூற முடியும்?... அந்த மாதத்திரை உண்மையிலேயே நல்ல மாத்திரையாகவும் கொடுக்கும் பணத்துக்கு ஈடானதாகவும் இருந்தால், ஏன் அதை Open Market ல் My V3 Ads நிறுவனம் விற்கவில்லை?... 

    சரி... "நான் அந்த மாத்திரையை சாப்பிடவில்லை. காசு கொடுத்து Membership மட்டும் Upgrade செய்து கொள்கிறேன். ஒரு 10 மாதங்களுக்குள்ளாகவே போட்ட தொகையை எடுத்து விடுவேன்" என்று கூறினால், அந்த பணம் எப்படி வருகிறது? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

MLM - Multi Level Marketing and Ponzi Scheme 

My V3 Ads is Scam or legit
Multi Level Marketing 

    இந்த இடத்தில் தான் உள்ளே வருகிறது MLM எனப்படும் Multi Level Marketing. இந்த Marketing நுட்பம் ஒரு Pyramid Chain போன்றது. ஒருவர், அவருக்கு கீழே மூவர், அவர்களுக்குக் கீழே ஒன்பது பேர், அவர்களுக்கும் கீழே 27 பேர்... என ஆள் சேர்க்க சேர்க்க, இந்த Chain நீண்டு கொண்டே போகும். ஆள்  சேர்ப்பது தான் MLM நிறுவனங்களின் முதுகெலும்பே... 

    ஒரு மதிப்பு குறைந்த பொருளுக்கு அதிக இலாபம் வைத்து விற்று, கீழிருப்பவர்கள் வாங்கும் தொகையின் ஒரு பகுதியை மேலிருப்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொடுத்து அதிலிருந்து சம்பாதிப்பது தான் MLM. இப்படி கீழே இருப்பவர்கள் கொடுக்கும் பணமானது அப்படியே நகர்ந்து நகர்ந்து மேலே இருப்பவர்களிடம் செல்கிறது. இது தான் MLM Concept. இந்த பிரமிட் சங்கிலியின் உயரத்திலும் இடையிலும் இருக்கும் நபர்கள் தான் 'நான் மாதாமாதம் 100000 சம்பாதிக்கிறேன்... 50000 சம்பாதிக்கிறேன்...' என உதார் விட்டு சுற்றுகிறார்கள். இந்த சங்கிலியின் கீழே இருக்கும் நபர்களுக்கு கடைசி வரை பட்டை தான்! 

    MLM ன் ஏமாற்று வேலையே இது தான். கண்டிப்பாக ஒரு கட்டத்தில் இந்த சங்கிலி முட்டிக்கிட்டு நிக்கும். மேலே இருப்பவர்கள் இலட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள். கீழே இருப்பவர்கள் கஷ்டப்பட்டு ஆள் சேர்த்து மேலே இருப்பவர்களுக்காக பணம் சேர்ப்பார்கள்! இதை Ponzi Scheme என்றும் கூறுவார்கள். 

My V3 Ads is Scam or legit
Charles Ponzi

    இத்தாலி நாட்டை சேர்ந்த Charles Ponzi என்பவர் தான் ஆட்களை ஒரு சங்கிலித் தொடர் போல ஒருவர் கீழ் ஒருவராக இணைத்து, ஒருவர் பணத்தை இன்னொருவருக்கு கொடுக்கும் ஒரு புதிய Business Technology யை உருவாக்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த சங்கிலித் தொடர் முட்டிக்கொண்டு நிற்கவே 1920 ல் இந்த Business வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியாவில் இந்த Ponzi Scheme முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். 

    தடை செய்யப்பட்ட ஒரு விஷயத்தை எப்படி பொது வெளியில் ஒரு நிறுவனத்தால் செய்ய முடியும்? என்று கேட்டால், அதற்கு தான் அவர்கள் 'விளம்பரம் பார்ப்பதற்கு தான் பணம் கொடுக்கிறோம்' என பிளேட்டை மாற்றி போடுகிறார்கள். விளம்பரம் பார்ப்பதால் எப்படி பணம் கிடைக்கும்? என்று கேட்டால் அதற்கு ஒரு நீண்ட விளக்கத்தை கூறுகிறது My V3 Ads நிறுவனம். 


இணையம் எவ்வாறு வேலை செய்கிறது? 


    'யூடியூபில் வீடியோக்களுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் மூலமாக தான் யூடியூபர்களும் யூடியூபும் மட்டுமில்லாமல் கூகுள் பேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்களும் கூட விளம்பரங்கள் மூலமாகத் தான் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. அதே விஷயத்தை தான் நாங்களும் செய்கிறோம். விளம்பரங்களுக்காக எங்களுக்கு கிடைக்கும் பணத்தில் பெரும்பாலான தொகையை இலாப நோக்கின்றி பயனர்களுக்கு கொடுக்கிறோம்' என கூறும் போது இது உண்மையாகத் தான் இருக்குமோ? என்று பலருக்கும் தோன்றும். 

My V3 Ads is Scam or legit
My V3 Advertisements 

    ஆனால் My V3 Ads ல் விளம்பரம் பார்த்திருக்கும் அனைவருக்கும் அந்த விளம்பரங்களின் தன்மை மற்றும் அவை எப்படிப்பட்ட விளம்பரங்கள்? என்றும் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். My V3 Ads செயலியில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் local area business விளம்பரங்களாகத் தான் இருக்கும். Editing என்ற ஒன்றே இருக்காது. பெரும்பாலான விளம்பரங்கள் Visiting Card Photo ன் பின்னணியில் ஒரு voice over உடன் கூடியதாகவே இருக்கும். 

    இந்த செயலியில் விளம்பரம் பார்க்கும் யாரும் அந்த விளம்பரத்தில் வரும் பொருட்களை 'வாங்க வேண்டும்' என்ற நோக்கில் பார்க்க மாட்டார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். 'நம் விளம்பரத்தை பார்த்து யாரும் நம் பொருட்களை வாங்க மாட்டார்கள்' என்று தெரிந்தே ஒரு local area business man யாராவது ஒரு நிறுவனத்திற்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுப்பார்களா? விளம்பரத்தால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தே யாராவது செலவு செய்வார்களா? 

    ஒரு சில வீடியோக்களை Paid Views காகவும் My V3 Ads செயலியில் ஒளிபரப்புவார்கள். தங்களுடைய சொந்த தயாரிப்பு என்று அவர்கள் கூறும் சில பொருட்களை கூட விளம்பரமாக போடுகிறார்கள். 

My V3 Ads is Scam or legit
My V3 Advertisements

    இப்போது My V3 Ads செயலியில் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக நிறுவனரான சக்தி ஆனந்தனே கூறியிருக்கிறார். அந்த 60 இலட்சம் பேருக்கும் ஒரு நாளைக்கு 5 ரூபாய் வைத்து கொடுத்தால் கூட நாளொன்றுக்கு 3 கோடி ரூபாயை நிறுவனம் வாரி இறைக்க வேண்டும். மாதத்திற்கு 90 கோடி... வருடத்திற்கு 1080 கோடி! 

    'என் விளம்பரத்தை பார்த்தால் மட்டும் போதும்' என்று ஒரு நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விளம்பரம் போடுவார்கள் என்றும் உண்மையாகவே நீங்கள் பார்க்கும் விளம்பரத்திற்கான பணம் தான் உங்களுக்கு வருகிறது என்றும் நீங்கள் நினைத்தால் தாராளமாக My V3 Ads ல் முதலீடு செய்யலாம்! 

    இந்த MLM வழிமுறையில் இயங்கும் எல்லா நிறுவனங்களும் இதே வழிமுறையை தான் பின்பற்றுகின்றன‌. உங்களிடம் வாங்கிய பணத்திற்கு அதற்கான மதிப்பே இல்லாத ஒரு பொருளைக் கொடுத்து விட்டு, ஆரம்பத்தில் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக பணத்தை வாரி இறைத்து விட்டு, ஒரு பெரும் தொகை சேர்ந்து விட்டபின் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடுகிறார்கள். இந்த மாதிரி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்! 

My V3 Ads is Scam or legit
My V3 Ads is Scam or legit

    MLM chain பெரிதாக பெரிதாக ஒரு கட்டத்தில் My V3 Ads தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விடும். நீங்கள் சேர்த்து விட்ட உங்கள் சொந்தக்காரரோ நண்பரோ இறுதியில் பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பு? சேர்த்துவிட்ட உங்களின் சட்டையை தானே பிடிப்பார்கள்! அந்த ஆயுர்வேத மாத்திரையை சாப்பிட்டு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? நிறுவனம் பொறுப்பேற்குமா? நாம் மற்றொருவருக்கு ஒரு விஷயத்தை பரிந்துரைக்கும் போது அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டாமா?

My V3 Ads is a Scam? 

My V3 Ads is Scam or legit
My V3 Ads is Scam or legit

    இந்த நிறுவனம் GST ன் கீழே கூட வருகிறது. ஆயுர்வேத பொருட்களை Goods ஆகவும் ஆள் சேர்ப்பதை Service ஆகவும் வைத்திருக்கிறார்கள். உங்களிடம் வாங்கிய பணத்திற்கு உங்களுக்கு பொருட்களையும் தந்திருக்கிறார்கள். விளம்பரம் பார்ப்பதால் தான் பணம் தருகிறோம் என கூறியும் இருக்கிறார்கள். இப்படி எல்லா வகையிலும் My V3 Ads நிறுவனம் பிரச்சனைகளில் மாட்டி கொள்ளாத வகையில் Safe ஆக இருக்கிறார்கள். 

    நாளைக்கே நிறுவனம் கம்பி நீட்டி விட்டால் கூட சட்டத்திலிருக்கும் ஓட்டைகள் வழியாக சுலபமாக தப்பித்தும் விடுவார்கள். உங்கள் பணம் அடுத்தவன் பாக்கெட்டுக்கு செல்கிறது... இதுதான் My V3 Ads ன் Business Trick. இதை நம்பி எப்படி பணம் கொடுக்க முடிகிறது? 

    வெறும் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் பிஸ்கட் பாக்கெட்டிலேயே Expiry Date பார்த்து வாங்கும் நம் மக்கள், எப்படி ஒன்றையுமே யோசிக்காமல் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறார்கள்? மக்களை சுலபமாக நம்ப வைக்க இவர்கள் கையிலெடுத்திருக்கும் தாரக மந்திரம் தான் "வாழ வைத்து வாழ்!" இந்த வாக்கியத்தை My V3 Ads ல் பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும். 

My V3 Ads is Scam or legit
My V3 Ads is Scam or legit

    My V3 Ads ஏமாற்று வேலையாக இருந்தால் கோவையில் எப்படி இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது? என்று கேட்டால், காரணம் சமூக வலைதளங்கள் தான். 'My V3 Ads மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்' என்ற செய்தி வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் பரவ ஆரம்பிக்கவே, 'தாங்கள் முதலீடு செய்த பணம் போய் விடுமோ?' என்ற அச்சத்தில் கூட அத்தனை பேர் அங்கு கூடியிருக்கலாம். 'தங்கள் மீது தவறில்லை' என்றால் எதற்காக கூட்டத்தை சேர்க்க வேண்டும்? தகுந்த ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் அதை நிரூபித்திருக்கலாமே! 

My V3 Ads is Scam or legit
Coimbatore My V3 Ads Issue

    இத்தனை பேர் நம்பி கூடியதால் இது உண்மை என்று கூற முடியாது. இத்தனை பேரை கூட்டியதால் தான் My V3 Ads யை நம்பவே முடியாது! இவ்வளவு வாசித்த பிறகும் "அவன் அவன் இலட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். உங்களுக்கெல்லாம் பொறாமை... அதான் இப்படி சொல்றீங்க" என அந்த செயலியில் பார்த்த வீடியோவில் கூறியது போலவே நினைக்கிறீர்கள் என்றால்... ஒண்ணுமே சொல்றதுக்கில்ல... போய் விளம்பரங்களைப் பார்த்து இலட்சாதிபதி ஆகிக் கொள்ளுங்கள்! 

My V3 Ads is Scam or legit
My V3 Ads is Scam or legit

    வழக்கமாக ஒரு Scam நடந்து முடிந்த பிறகு தான் விழித்துக் கொள்வோம். இந்த நிகழ்வில் அது கொஞ்சம் முன்னதாகவே நடந்து விட்டது. Alert ஆகி விடுவது சாலச் சிறந்தது. '0% முதலீட்டு தொழில் தொடங்க வாய்ப்பு' என்று கூறி விட்டு எதற்கு காசு கொடுக்க சொல்கிறார்கள்?

    முடிவா என்னத்தான் சொல்ல வர்ற? My V3 Ads ஒரு Scam ஆ? இல்லையா? என்று கேட்டால்... அந்த முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். இவ்வளவு வாசித்த உங்களுக்கு எல்லாமே புரிந்திருக்கும். முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளலாம். உடலுழைப்பையோ அறிவையோ பயன்படுத்தாமல் வரும் எந்தவொரு வருமானமும் நிலைக்காது. ஒருவர் உங்களிடம் கஷ்டப்படாமல் சம்பாதிக்கலாம் என்று கூறினால், அப்படியே திரும்பி பார்க்காமல் ஓடி விடுங்கள் என்பது தான் எனது கருத்து! 

நன்றி!... 


கருத்துரையிடுக

3 கருத்துகள்