How Does the Internet Work? | Exploring the Fundamentals
இணையம் எவ்வாறு வேலை செய்கிறது?
How Does The Internet Work |
நாம் வாழ்கின்ற இந்த நாட்கள் இணையம் என்னும் Internet உலகை ஆளுகின்ற நாட்கள்... காலையில் குட் மார்னிங் சொல்ல இணையம் வேண்டும்... வேலை பார்க்க இணையம் வேண்டும்... படிக்க இணையம் வேண்டும்... ஒட்டுமொத்தமாக காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை நம் வாழ்வை இயக்குவதே இணையம் என்னும் Internetwork தான்! ஒரே ஒரு நாள் மட்டும் இணையம் இல்லையென்றால் இந்த உலகமானது நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மாறியிருக்கும். ஏன் Internet இவ்வளவு முக்கியமாக உள்ளது? இந்த Internet எப்படி வேலை செய்கிறது? நம் வாழ்வின் ஒரு அங்கமான இந்த இணையத்தை பற்றி "How does the Internet Work?" என்ற தலைப்பில் இப்பதிவில் தெளிவாகப் பார்க்கலாம்.
நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் இந்த பதிவை Google ல் படிக்கிறீர்களா? அல்லது Internet ல் படிக்கிறீர்களா? என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? இப்போது 'நான் ஒரு புகைப்படத்தை என்னுடைய போனில் எடுத்து அதை Internet வாயிலாக உங்களுக்கு அனுப்புகிறேன்' என வைத்துக்கொள்ளுங்கள். எப்படி என்னுடைய போனிலிருக்கும் புகைப்படம் உங்கள் போனுக்கு நொடிப்பொழுதில் வந்து சேர்ந்தது? இணையம் எப்படி இதை செய்கிறது?... இணையம் என்பது ஒரு மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Technology) என்பது உங்கள் பதிலாக இருந்தால் இந்த பதிவை படித்து முடிக்கும் போது உங்கள் பதிவில் சற்று மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கிறேன்...
What is Internet?
இணையம் என்றால் என்ன?
Network |
முதலில் Internetwork பற்றி பார்ப்பதற்கு முன்பாக Network என்றால் என்ன? என நாம் அறிந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு அறையில் பல கணினிகள் (Mobiles also mini computers) இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த கணினிகளுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக, இந்த கணினிகள் அனைத்தையும் பொதுவான ஒரு அமைப்புடன் இணைப்பது தான் Network அதாவது Local Network. அந்த பொதுவான அமைப்பு தான் Router. மொபைல் டவர்களும் ஒரு வகையில் பெரிய அளவிலான Router கள் தான்.
Internetwork |
இப்படி உலகிலுள்ள அனைத்து கணினிகளையும் Local Network களையும் ஒன்றோடொன்று இணைப்பதற்கு தான் Internetwork அதாவது Internet என்று பெயர். சுருக்கமாக சொன்னால் உலகிலுள்ள அனைத்து கணினிகளையும் ஒன்றோடொன்று இணைப்பதற்கு பெயர் தான் Internet. சரி இந்த Internet எங்கிருக்கிறது? யார் இதை கட்டுப்படுத்துவது? ஜியோவா? ஏர்டெல்லா?... பார்க்கலாம்!
How does information move from one place to another through the Internet?
இணையம் மூலம் தகவல்கள் எவ்வாறு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்கிறது?
How Does The Internet Work |
இப்போது நாம் போட்டோ விஷயத்திற்கு வரலாம். நான் ஒரு புகைப்படத்தை Internet மூலமாக உங்களுக்கு அனுப்புகிறேன் என்றால், அந்த புகைப்படத்தை என்னுடைய போனானது பல சிறு சிறு பகுதிகளாக பிரிக்கிறது. எளிதாக புரியும் படி சொன்னால், இந்த சிறு பகுதிகள் அனைத்தையும் ஒரு உறைக்குள்ளிருக்கும் கடிதமாக நினைத்துக் கொள்ளுங்கள். இந்த கடிதங்கள் அனைத்திற்கும் ஒரு header அதாவது address இருக்கும். இக்கடிதம் 'எங்கிருந்து வருகிறது?' மற்றும் 'எங்கே போகிறது?' போன்ற தகவல்கள் இந்த header ல் அடங்கியிருக்கும். Internet கு என்னுடைய address எப்படி தெரியும்? என்று கேட்டால், அந்த முகவரி உங்கள் வீட்டு முகவரி அல்ல... உங்கள் கணினியின் IP Address... ஒரு Online Postal Service போலத்தான் Internet ம் வேலை செய்கிறது என சுருக்கமாகக் கூறி விடலாம்!
இனி சற்று தெளிவாகப் பார்க்கலாம். நம் கணினியிலுள்ள அனைத்து தகவல்களும் 0 மற்றும் 1 என்று தான் சேமிக்கப்பட்டிருக்கும் என்று நமக்குத் தெரியும். கணினிகள் தங்களுக்குள் ரகசியமாக தகவல்களை பரிமாறிக் கொள்ள பயன்படுத்தும் ஒரு வகையான Morse code தான் இந்த Binary Language. அதாவது நான் உங்களுக்கு அனுப்பிய புகைப்படம் வெறும் 1 அல்லது 0 களாகத் தான் என்னுடைய போனை விட்டு வெளியேறும்.
Binary Language |
இந்த ஒரே ஒரு 1 அல்லது 0 யை தான் ஒரு Bit என்பார்கள். இப்படி 8 Bits சேர்ந்தது தான் ஒரு Byte. 1024 Bytes சேர்ந்தது தான் ஒரு Kilobyte. 1024 Kilobytes சேர்ந்தது தான் ஒரு Megabyte. 1024 Megabytes சேர்ந்தது தான் ஒரு Gigabyte. இப்படி சொன்னால் வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். So வரிசையை இத்தோடு நிறுத்தி விட்டு கதைக்கு வரலாம்.
How Does The Internet Work |
இப்போது நான் உங்களுக்கு அனுப்பும் போட்டோ 1 MB அளவுக்கு இருந்தால், அந்த புகைப்படத்தை என்னுடைய போனானது 8,388,608 ஒன்றுகளாகவும் பூச்சியங்களாகவும் பிரித்து அதை Router கு அனுப்பும். போன் எப்படி இந்த தகவல்களை Router கு அனுப்பும்? இங்கு தான் உள்ளே வருகிறது Radio waves. இப்போது 1 யை Router க்கு அனுப்ப வேண்டும் என்றால் குறிப்பிட்ட frequency கொண்ட அலையையும் 0 யை Router கு அனுப்ப வேண்டும் என்றால் மற்றொரு குறிப்பிட்ட frequency கொண்ட அலையையும் அத்தகவலை Router புரிந்து கொள்ளும் வரை தொடர்ந்து அனுப்பும். இதைத் தான் Frequency Modulation என்கிறோம்.
Router |
இப்போது Router ஆனது தான் பெற்ற அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து தன் பின்னால் சொருகப்பட்டிருக்கும் Optical Cables மூலமாக ஒரு புதிய வடிவத்தில் வெளியேற்றுகிறது. இந்த Optical Cables களின் தன்மையை பொருத்து மின் துடிப்புகள் அல்லது லேசர் துடிப்புகள் மூலமாக தகவலானது Network யை விட்டு Internet க்கு செல்கிறது. ஏனென்றால் ஒளியும் ஒரு வகையான Wave தான். இப்போது Binary Data 1 என்றால் light on ஆகும். 0 என்றால் light off ஆகும்.
நான் உங்களுக்கு அனுப்பிய அந்த போட்டோ ஒன்றுகளாகவும் பூச்சியங்களாகவும் மாறி, ரேடியோ அலையாக மாறி, ஒளியாக மாறி உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அடுத்து இது எங்கு செல்கிறது? என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த செயல்முறைகளுக்கு என்று பல Protocol கள் அதாவது பல வழிமுறைகள் உள்ளன. TCP அதாவது Transmission Control Protocol மற்றும் IP போன்ற வழிமுறைகள் தான் மிகவும் முக்கியமானவை. இந்த TCP வழிமுறை தான் உங்கள் புகைப்படத்தை பல சிறு சிறு பகுதிகளாக பிரித்து அனுப்புகிறது.
Internet Hub |
நான் அனுப்பிய அந்த புகைப்படம் ஒளியாக மாறி ISP என்றழைக்கப்படும் Jio, Airtel போன்ற Internet Service Provider களுக்கு சொந்தமான கேபிள்கள் வழியாக ஒரு முக்கியமான இடத்திற்குச் செல்கிறது. அந்த இடம் தான் Internet Hub. இப்பொழுது 'நான் பயன்படுத்துவது Jio நெட்வொர்க்காகவும் நீங்கள் பயன்படுத்துவது Airtel நெட்வொர்க்காகவும் இருந்தால்' இந்த மாதிரியான இரு வேறுபட்ட நெட்வொர்க்குகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முக்கியமான இடம் தான் Internet Hub. 'நானும் நீங்களும் உள்ளூரில் தான் இருக்கிறோம்' என்றால் பயணம் இத்தோடு முடிந்து விடும். ஒருவேளை நீங்களோ நானோ வெளிநாட்டிலிருந்தால் இங்கிருந்து தான் பயணமே ஆரம்பிக்கும்...
Underwater Optical Cables
Underwater Data Cable Map |
வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய தகவல்கள் இங்கிருந்து அப்படியே Internet Backbone மையத்திற்கு செல்கிறது. இந்த இடங்களை உருவாக்கி பராமரிக்கும் நிறுவனங்கள் தான் கடலுக்கடியில் ஆப்டிகல் கேபிள்களை பதித்து கண்டங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறுகிறது. நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் ஒன்றும் காற்றிலிருந்து வருவது கிடையாது. அது முழுக்க முழுக்க கேபிள்கள் மூலம் நடக்கும் அதிவேக பரிமாற்றம் தான்.
Optical Data Cable |
கடலுக்கடியில் பதிக்கப்படும் இந்த கேபிள்கள் பல கட்ட பாதுகாப்பு அடுக்குகளுடன் நடுவில் Fiber ஆல் ஆன கம்பிகளைக் கொண்டதாக ஆழ்கடலின் அடியில் பதிக்கப்பட்டிருக்கும். இந்த கேபிள்கள் மூலமாக அதிவேகமாக தகவல்கள் ஒளி வடிவில் கடந்து சென்று அடுத்த முனையிலுள்ள Internet Backbone மையங்களுக்கு சென்று, அங்கிருந்து Internet Hub யை அடைந்து, அங்கிருந்து பிரிந்து உங்கள் அருகிலுள்ள Router யை வந்தடைந்து, ரேடியோ அலைகளாக மாறி உங்கள் போனை வந்தடைந்த பின் பூச்சியங்களாகவும் ஒன்றுகளாகவும் மாறி உங்கள் ஃபோன் திரையில் அழகிய புகைப்படமாக வந்து சேர்கிறது.
Optical Data Cable Work |
இந்த செயல்முறைகள் அனைத்தும் சில வினாடிகளிலேயே நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் இதற்கு பின்பாக எண்ணற்ற மனிதர்களின் உழைப்பு இருக்கிறது. டவர்கள் மற்றும் Router களை பராமரிப்பது முதல் கடலுக்கடியில் கேபிள்களைப் பதித்து, பராமரித்து, சரிசெய்வது வரை அதிக அளவில் மனித உழைப்பும் கோடிக்கணக்கில் பணமும் தேவைப்படுகிறது. இதனால் தான் இலவசமாக கிடைக்கும் Internet க்கு நாம் பணம் கட்டி பயன்படுத்துகிறோம்.
ஆழ்கடலில் கேபிள்களை பதிப்பது எல்லாம் சரிதான்... ஒருவேளை மீன்கள் ஏதாவது அந்த கேபிள்களை கடித்தால் ஒரு நாட்டுக்கும் மற்ற நாட்டுக்கும் இடையேயான ஒட்டுமொத்த இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிடுமா? என்று கேட்டால், இது ஒரு சிக்கலான கேள்வி!
How Does The Internet Work |
கடந்த 2014ல் சுறா ஒன்று இப்படி ஆழ்கடலின் அடியில் பதிக்கப்பட்டிருக்கும் ஆப்டிக்கல் கேபிள்களைக் கடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாயின. அப்போது 'சுறாக்கள் ஒன்றும் இன்டர்நெட்டின் விரோதி அல்ல' என்று Internet Cable Protection Committee செய்தி வெளியிட்டிருந்தது. அப்போ யார் தான் விரோதி?... வேற யாரு... நம்ம மனிதப் பிறவிகள் தான்!
மீன் பிடித்தல், நங்கூரங்களை இறக்குதல் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டும் மனிதனின் செயல்களால் தான் அதிகமாக ஆப்டிகல் கேபிள்கள் சேதமடைகிறதாம். கடந்த 2019 ஜனவரியில் இதே மாதிரியான ஒரு நிகழ்வு தான் டோங்கா நாட்டிலும் நடந்தது. நங்கூரங்களால் டோங்கா நாட்டிற்கான இணையத்தை வழங்கும் டேட்டா கேபிள்கள் சேதமடைந்தன. இதனால் கிட்டத்தட்ட 13 நீண்ட இரவு பகல்களை இந்நாட்டவர்கள் இணையமில்லாமல் கழித்தனர். ஆனால் பெரும்பாலான நாடுகள் ஒன்றிற்கும் மேற்பட்ட இணைய வழித்தடங்களைக் கொண்டிருப்பதால் இந்த பிரச்சனைகள் வருவது மிகக் குறைவு தான்.
போட்டோ அனுப்பவது வருவது எல்லாம் சரி தான்... இந்த YouTube, Facebook இது எல்லாம் எப்படி? என்று கேட்டால், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற வலைதளங்களின் சர்வர்களே ஒரு கம்பியூட்டர் தான். உங்கள் கணினியை மற்ற கணினியோடு இணைக்கும் அதே பணியை தான் இந்த இடத்திலும் Internet செய்கிறது. நீங்கள் கேட்கும் விஷயங்களை அந்தக் கணினிக்கு கொண்டு சென்று, அதற்கு அந்த கணினி அளிக்கும் பதில் தகவலை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.
Balloon Internet |
கேபிள்கள் மற்றும் டவர்கள் வைக்க முடியாத தனிமைப்படுத்தப்பட்ட இடங்களையும் இணைய உலகத்தோடு இணைக்க பலூன்கள் மற்றும் செயற்கைக்கோள்களை ஒரு Router போல பயன்படுத்தி அந்த இடங்களுக்கும் Internet Connection வழங்கப்படுகிறது.
இப்படி நாம் இணையம் மூலமாக அனுப்பும் அந்த ஒன்றை புகைப்படத்தின் பின்னால் இத்தனை விஷயங்கள் நடக்கின்றன. நாம் நம் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பும் ஒன்றை செய்தியின் பின்னால் எண்ணற்ற மனிதர்களின் உழைப்பு இருக்கிறது.
How was the Internet created? (ARPANET)
இணையம் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
ARPANET |
நாம் இன்று பயன்படுத்தும் Internet தனி ஒருவரால் உருவாக்கப்பட்டதன்று. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இணையத்தின் பல பகுதிகள் பலரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ARPA Agency யால் முன்னெடுக்கப்பட்ட 'ARPANET' என்னும் திட்டம் தான் இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெட்டின் முன்னோடி ஆகும்.
Tim Berners Lee |
ஒருகாலத்தில் அரசாங்கங்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த இன்டர்நெட் 90களின் முற்பகுதியில் டிம் பெர்னர்ஸ் லீ-யின் (Tim Berners Lee) www. கண்டுபிடிப்புக்குப் பின்பாக தான் முழு வீச்சில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
அன்று முதல் இன்று வரை Internet படிப்படியாக வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்டர்நெட் பற்றி இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதை அடுத்தடுத்த பதிவுகள் மூலமாக தெளிவாகப் பார்க்கலாம். மேலும் இந்த பதிவை பற்றிய உங்கள் மன எண்ணங்களை கீழே உள்ள கமென்ட் பெட்டியில் கொட்டி விட்டு செல்லுங்கள் மக்களே!...
நன்றி!...
2 கருத்துகள்
💖
பதிலளிநீக்குSuper 👍
பதிலளிநீக்கு